Saturday, October 26, 2013

மரணம் பற்றிய நம் பயம்

மரணம் பற்றி என்ன தெரியும் நமக்கு ? ஆரம்பத்திலே கேள்வியோடு தொடங்குவது தான் வாழ்க்கை அதே போல தான் நானும் மரணத்தை கேள்வியோடு தொடங்குகிறேன் , மரணம் என்பது என்ன ? மரணத்திற்கு அப்புறம் நாம் எங்கே செல்கிறோம் ? மரணம் தான் முடிவா ? இப்படி ஆயிரம் கேள்விகளை நான் எனக்குள்ளே வைத்துக்கொள்கிறேன் .

கப்பல் துறையில் வேலைக்கு சென்று திரும்பும் என் நண்பர்களிடம் நான் தவறாமல் கேட்கும் ஒரு கேள்வி "மச்சி ROUGH WEATHER வந்துச்சா? " என்பது தான் . அதில் என்ன இருக்கும் என்று கேட்கிறீர்களா ..கடலின் கோரத்தாண்டவத்தில் கப்பல் சின்ன பொம்மை போல ஆகிவிடும் ..நாம் இங்கே மழை வரும் என கொண்டாடும் காற்று அழுத்த தாழ்வு நிலை கடலில் ஒரு ருத்திர தாண்டவமாக இருக்கும் (கப்பல் என்ன ஆகும் என்பதை கடைசியில் வீடியோவாக இணைத்து உள்ளேன்).. சரி நான் கேட்பதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ? இருக்கிறது ! மரண பயம் என்று சொல்வோமே அதை நாம் உணர முடியும் அந்த நேரத்தில் ..ஆனால் அதே கடலிலே பழகிப்போனவர்களுக்கு அந்த பயம் நீங்கி விடும் ...இவ்வளவு தான் என்று ஆகி விடும்

"சாவு பயத்த காட்டினாய்ங்க பரமா ..ஒரு பொம்பள காலுல விழ வச்சுடாய்ங்க" என்று சுப்பிரமணியரம் படத்தில் ஜெய் சொல்லும் போது எதார்த்தமாகவே பலி உணர்ச்சியை விட மரண பயம் வந்துவிடும் ..அதே தான் மரணம் என்பது தான் நம் உச்சக்கட்ட பயம் ..நடுநசியில் ஒரு நாய் உங்களை துரத்தினால் உங்களுக்கு தெரியும் நீங்கள் இறந்து போக மாட்டீர்கள் என்று ஆனாலும் வலி குறித்த பயம் ..

பயம் என்பதை தாண்டி நமக்கு ஒன்று நிச்சயம் தெரியும் என்றாவது ஒரு நாள் இறந்து விடுவோம்  என்று ஆனாலும் என்றுமே வாழும் ஒரு உயிரினம் போல நம்முடைய பயத்தை மறந்து கேடு செய்கிறோம் ,,இந்த பத்தியை நீங்கள் உன்னிப்பாக படித்தால் கடவுள் இருப்பார் ...ஆம் கடவுளின் தேவை நமக்கு மரணம் குறித்த அச்சத்தில் தான் இருக்கிறது ..கடவுள் உண்டு , கடவுள் இல்லை இரண்டிலும் பயம் இருக்கிறது ...

மரணித்த பிறகு நாம் என்ன ஆவோம் என்று யாரேனும் சொல்லிவிட்டால் நாம் அவரையே குருவாக ஏற்றுக்கொள்வோம் ..மரணித்த பிறகு என்ன ஆவோம் என்று ஒரு கூட்டம் நம்பிக்கொண்டு இருந்தால் நாம் அதையே மதக்கோட்பாடு என்கிறோம் ...சொர்க்கம் ,நரகம் என இரண்டுமே மரணத்திற்கு அப்பால் என்ன என்ற நம் கேள்விக்கான சப்பைக்கட்டு பதில்கள் அவ்வளவு தான்

ஆவியுடன் பேசுகிறேன் , பேய்கள் என யாரேனும் சொன்னால் நாம் உடனே ஈர்க்கப்படுவோம் , இது மனிதனின் காரண அறிவுக்கு தீனி போடும் செயல் ..அப்போ இறந்தவங்க பேய் ஆகிருவாங்களா ? என்ற கேள்வி தான் அந்த ஈர்ப்புக்கும் காரணம்

என்னை அதிகம் பாதித்த மரணம் என்றால் இது வரை எதுவும் இல்லை என்றே சொல்ல வேண்டும் (ஏன் என்றால் என்னை அதிகம் பாதிக்கும் மரணம் என் மரணமாகத் தானே இருக்க முடியும் ) ..இரு வாரங்களுக்கு முன்னாள் மெரீனா கடற்க்கரையில் ஒரு வெள்ளை உருவம் உருண்டு கிடந்ததது ...எல்லோரும் கூடி நின்று பார்த்தார்கள் ..ஆம் அது ஒரு பிணம் (அவருக்கு பெயர் இருந்து இருக்கலாம் ) ..கடலில் மீன் உண்ட மிச்சமாக உப்பு தண்ணீருக்கு ஊதிய ஒரு உடல் . அந்த மரணம் கூட என்னை சிறிது அளவு பாதித்தது ...ஆனால் நான் இன்னும் விடை கண்ட பாடில்லை

மரணித்த எந்த உயிரும் (உயிருக்கு மரணம் உண்டா என்பதை ஆன்மீகவாதிகள் சொல்வார்கள் எனக்கு தெரியாது ) என்ன ஆகிறது என்று நமக்கு தெரியாது ஆனால் இது எதோ ஒரு சுழற்சி என்ற அளவில் மட்டுமே மரணத்தை நாம் அணுகி வருகிறோம் ...மனித உடலின் இயக்கம் நின்று விட்டால் அறிவியல் அதை மரணம் என்று சொல்கிறது ..ஆனாலும் மரணித்த ஒரு மனித உடலிலும் முடி வளரும் என்ற கூற்றும் நம்மை சிந்திக்க வைக்கிறது ..அப்ப எப்ப தான்யா மனுஷன் முழுசா சாவான்?

சிகரட் , மது இது இரண்டும் மரணத்தை வர வைக்கும் என்று தெரிந்தும் நான் உட்பட பல மனித ஜந்துக்கள் அதில் ஆர்வமாக இருக்க என்ன காரணமாக இருக்கும் என்பதை மரணம் தான் தீர்மானித்து சொல்ல வேண்டும்

மரணம் பற்றி என் விடை இது தான்
 

மரணம் என்பது என்ன என்ற தேடலில் வாழ்க்கையை தொலைப்பதை விட்டுவிட்டு மரணம் நமக்கு நிச்சயம் வரும் என்ற எண்ணத்தில் வாழ்ந்தாலே நமக்கு வாழ்க்கை இனிப்பாக இருக்கும்


7 comments:

  1. வணக்கம்
    மரணம் என்பது என்ன என்ற தேடலில் வாழ்க்கையை தொலைப்பதை விட்டுவிட்டு மரணம் நமக்கு நிச்சயம் வரும் என்ற எண்ணத்தில் வாழ்ந்தாலே நமக்கு வாழ்க்கை இனிப்பாக இருக்கும்

    பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மரணம் நமக்கு நிச்சயம் வரும் என்ற எண்ணம் பல பேருக்கு இல்லாததால் தான் அவரவர் வாழ்வில் பல சிக்கல்கள், பிரச்சனைகள்...

    நல்லதொரு ஆக்கத்திற்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
  3. சிகரட் , மது இரண்டும் மரணத்தை வர வைக்கும் (உடனடியாக அல்ல) என்று தெரிந்தும் சில மனித ஜந்துக்கள் அதில் ஆர்வமாக இருப்பது வருந்தத்தக்கது. அத்தகைய ஜந்துக்களை நல்வழிப்படுத்த நீங்கள் ஏன் ஒத்துழைக்கக் கூடாது? அன்புடன் - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை.

    ReplyDelete
  4. நல்லதொரு ஆக்கம்!! நிச்சயமாக மரணம் உண்டு என மனிதன் நினைத்து வாழ்ந்தால் யாதொரு துன்பமும் இல்லை

    ReplyDelete
  5. maranam irukkiradhu enra unmai ellorukkum theriyum.. Anal namukku mattum manam varadhu enra nambikkayil Avan ayokithanam irukkirathey .. Adathada.. Adathada manithaaaaaa.. kukural ettal payan unda?

    ReplyDelete
  6. maranam patri ungal manam sollum katturaiyai padiththen ..superrrrrrrrrrrrrrr

    ReplyDelete