Friday, April 12, 2013

வாழ்க்கை என்பது கடல்

கடல் எப்படி எல்லா உயிரினங்களின் பிறப்பிடமோ அதே போல் கடல் தான் இன்று பல உயிர்களின் தாய் , மனிதன் என்பவன் கடலில் தோன்றிய ஒரு பொட்டு உயிரில் இருந்து பரிணமித்து வந்தவன் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை

கடலின் உப்பு காற்றை போல நம் வாழ்விலும் உப்பு நிறைந்த படலங்கள் இருக்கத்தான் செய்கிறது , அதற்காக கடலை கொண்டாடமல் இருக்கிறோமோ ? இல்லை கடல் கரையை தான் ரசிக்காமல் இருக்கிறோமா ?.
மனதில்  பல சஞ்சலங்களை நிரப்பிக்கொண்டு கடற்கரை வரை போய் வாருங்கள் உங்கள் மனது மெதுவாகும் , கடல் தான் உயிரினங்களின் தாய் , அவளிடம் நாம் எந்த குறையோடு போய் நின்றாலும் நம்மை அப்படியே அரவணைத்து நம் சோகம் துடைத்து அனுப்புவாள்

கடலில் விஷ மீன்கள் வாழ்வது போல நம் மனதிலும் , நம் சமூகத்திலும் விஷ எண்ணங்கள், விஷ மனிதர்கள் வாழத்தான் செய்கிறார்கள் , படைப்பின் அற்புதம அப்படி!!! படைப்பிற்கு மலமும் அமுதமும் ஒன்று தான் , இருந்தாலும் விஷத்தில் இருந்து ஒதுங்கி இருப்பது நம் கையில் கொடுத்து விட்டு தன் வேலையை பார்க்கிறது படைப்பு

யாருமே இல்லாத ஒரு கடற்கரையில் "ஓஓஓஓஓஒ" என்று கத்திக்கொண்டே ஓடியது உண்டா ?? ..சத்தங்கள் தான் வாழ்வின் உயிர்த்துடிப்பு ,அதனால் தான் நம் ஆதி காலம் முதல் மந்திரங்கள் ஒலி வடிவிலே வந்து கொண்டு இருக்கிறது , சத்தங்கள் நம்மை அப்படியே ஒரு அதிர்வு நிலைக்கு கொண்டு செல்கிறது , நம் அப்பா போடும் சத்தம் நம்மை அப்படியே ஒரு நொடி ஆடாமல் அசையாமல் கட்டி போடுவது இல்லையா ?? ஓடுங்கள் இனிமேல் கடற்கரையில் கத்திக்கொண்டே ஓடுங்கள் தமிழர்களே மெரீனா மட்டுமே கடற்கரை அல்ல உலகில் மனிதனின் கால் தடம் பதியாத கடற்கரை தேடி ஓடுங்கள்

கடலின் அலை எழும்பி வருவத்தை கண் கொட்டாமல் ரசித்து உண்டா , அது ஒரு தியானம் , கடல் அலையின் ஒரு கட்டுக்கோப்பான இசையுடன் வருவதை உங்கள் கண்களால் அலை மீது படர விட்டது உண்டா ?? அப்படியே அலையை போல உங்கள் மனதும் துள்ளி மேல் எழும்பி இறங்கியது உண்டா ?? கவனியுங்கள் கடல் அலை தான் நம் வாழ்வின் மிகப்பெரும் பாடம் , அது எவ்வளவு மேல் எழுகிறதோ அவ்வளவு கீழ் விழுகிறது , வெற்றியோ தோல்வியோ நிரந்தரம் இல்லை என்று அது காலம் காலமாக சொல்வது உங்களுக்கு கேட்கவில்லையா ??

கடல் நீரை சுவைத்து உண்டா ? அதை சுவைத்தால் அப்படியே உப்பாக இருக்கும் , அதே கடல் நீர் தான் வானத்திற்கு சென்று வடிகட்டப்பட்டு மழையாக வருவது உங்களுக்கு தெரியுமா ???

கடற்கரையின் நறுமணம் அறிவீர்களா ?? அது மழைவரும் மண்வாசனை போல் அல்லாமல் , மீன் வாசனையும் சேர்ந்து அடிக்குமே அதை  நீங்கள்  மூக்கை தீட்டி வைத்துக் கொண்டு முகர்ந்து அப்படியே மெய் மறந்தது உண்டா??

கடலில் நிர்வாணமாக குளித்து உண்டா ?குறைந்தபட்சம்  வெறும் உள்ளாடையோடு குளித்தது உண்டா ?? கொஞ்சம் உள்ளே போனாலும் உயிர் போய் விடும் என்ற பயம் தாண்டி அலையோடு விழுந்து பிரண்டு மண்ணோடு உருண்டு குளித்து சிரித்து உண்டா ?? குளியுங்கள் , கடலில் குளித்து மகிழுங்கள்

இப்போது தானே கரையையே பார்த்து இருக்கிறோம் , இன்னும் இருக்கிறது உறவே கடலுக்குள் சென்று ,கடல் கடந்து , ராஜகுமாரியை புணர்ந்து, அதையும் தாண்டி அடைய வேண்டியது இருக்கிறது, என்னோடு பயணிப்பீர்கள் தானே ......

7 comments:

  1. அட்டகாசம் போங்க ...! ஏங்க பாஸ் நீங்க கடற்படையிலையோ இல்ல கப்பல்லையோ வேல பாக்குறீங்களா ? கடல இம்புட்டு ரசிச்சு எழுதீருக்கீங்க...! ரெம்ப புடிச்சுருக்கு .....! கடலும் கட்ஸ் சார்ந்த ஒங்க பதிவும் .

    ReplyDelete
    Replies
    1. ஆம் உறவே அடியேன் ஒரு கப்பல் பொறியாளர்

      Delete
  2. சுவாரஸ்யத்துடன் தொடங்கிய முதல் பயணம்... பாராட்டுக்கள்...

    கடல் பயணத்தையும், புது தளங்கள் சிறப்பாக தொடரவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் ..உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க WORD VERIFICATION நீக்கி விட்டேன்

      Delete
  3. அய்யா, கடலை பற்றிய உங்களது கருத்து மிக ஆழமாகவே இருந்தது, கொஞ்சம் மூழ்கிவிட்டேன். நன்றி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்

      Delete
  4. ஓர் கப்பல் பொறியாளரின் பார்வையில் கடலைப் பற்றிய கருத்துக்கள் அருமை நண்பரே....வாழ்த்துகள் !!!

    ReplyDelete